• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வருடாந்த வசுக் கட்டணத்தை திருத்துதல் - 2016
- இயைபுள்ள தகுதிவிதிகளை அடிப்படையாகக் கொண்டு தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கங்களின் கருத்துகளையும் கேட்டு வசுக் கட்டணத்தை திருத்தும் அதிகாரம் அமைச்சரவையினால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டதோடு, இதற்கமைவாக இந்த ஆணைக்குழுவினால் வசுக் கட்டணங்களைத் திருத்துவதற்கான கொள்கையொன்று 2002 ஆம் ஆண்டில் தயாரித்து நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. வசுக் கட்டணங்களைத் திருத்துவதற்காக நடைமுறையிலுள்ள கொள்கைகள் மற்றும் தகுதிவிதிகள் நிகழ்காலத்துக்கு ஏற்றவாறு திருத்தப்பட வேண்டுமென தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளினால் செய்யப்பட்ட கோரிக்கையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சிறந்த பொது போக்குவரத்து சேவையொன்றை நடாத்திச் செல்லும் நோக்கில் வருடாந்த வசுக் கட்டணத்தை திருத்துவதற்கு அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டிய புதிய தகுதிவிதிகள் ஏதும் இருப்பின் அவற்றையும் உள்ளடக்கி 2002 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் தகுதிவிதிகள் என்பவற்றை மீளாய்வு செய்வதற்கு இயைபுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.