• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க உத்தியோகத்தர்களின் திறன்விருத்தி துறை சம்பந்தமாக ஒத்துழைப்பு தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரியில் நடாத்தப்படவுள்ள "இலங்கையின் சிரேட்ட உத்தியோகத்தர்களுக்கான அரசாங்கத் துறையின் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம்" (Public Sector Leadership Programme for Senior Offcials from Sri Lanka) என்னும் ஐந்து நாட்கள் கொண்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று சிங்கப்பூர் அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டமானது ஒரு தடவையில் 35 பயிலுநர்கள் வீதம் இரு குழுக்களின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அடுத்த மாதத்தில் சிங்கப்பூருக்கு மேற்கொள்ளவுள்ள மாண்புமிகு பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அரசாங்க உத்தியோகத்தர்களின் திறன்விருத்தி துறை பற்றிய ஒத்துழைப்பு சம்பந்தமாக சிங்கப்பூர் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.