• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேக பாதை கருத்திட்டம் - மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான (கி.மீ. 39.91) இரண்டாம் பகுதியை மீரிகமவிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான (கி.மீ. 9.3) இணைப்பு பாதையுடன் நிருமாணிப்பதற்காக மதியுரை சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
- மத்திய அதிவேக பாதை கருத்திட்டத்தின் இரண்டாம் பகுதியின் கீழ் மீரிகமவிலிருந்து பொத்துஹர ஊடாக குருநாகல் வரை 39.91 கிலோ மீற்றர் நீளமான நான்கு (04) பாதைகளைக் கொண்ட அதிவேக பாதையொன்று நிருமாணிக்கப்படுவதோடு, மீரிகம இடமாற்றத்திலிருந்து அம்பேபுஸ்ஸ வரை 9.3 கிலோ மீற்றர் நீளமான இரண்டு இணைப்பு பாதையுடனான வீதியொன்று நிருமாணிக்கப்படவுள்ளது. இந்த நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரை சேவையை வழங்கும் பொருட்டு பொருத்தமான மதியுரை கம்பனியொன்றை தெரிவுசெய்வதற்குத் தேவையான கொள்வனவுப் பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.