• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துதல் - குளிரூட்டப்பட்ட களஞ்சிய வசதிகளை நிருமாணித்தல்
- பெரியவெங்காயம் கிழங்கு உட்பட மரக்கறி மற்றும் பழவகைகளின் விலைகள் ஆண்டினுள் வெவ்வேறு காலப்பகுதிகளில் கூடிக்குறைவது விவசாயிகளுக்கும் அதேபோன்று நுகர்வோருக்கும் பிரதிகூலமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கையில் பயிர்ச்செய்கை போக அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றமையினால் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக விளைச்சல் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக குளிரூட்டப்பட்ட களஞ்சிய வசதிகளை வழங்குவதற்கு 2016 வரவுசெலவுத்திட்ட முன்மொழிபுகளின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக முனனோடிக் கருத்திட்டமொன்றாக பெரிய வெங்காயம் உட்பட தெரிவுசெய்யப்பட்ட மரக்கறி மற்றும் பழவகைகள் சிலவற்றுக்கு தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தையும் கிழங்கு உட்பட தெரிவுசெய்யப்பட்ட மரக்கறி மற்றும் பழவகைகள் சிலவற்றுக்கு கெப்பிற்றிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தையும் மையமாகக் கொண்டு குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகளை நிருமாணிக்கும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.