• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பிரிவெனா தின விழாவினை நடாத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்துதல்
- நாட்டின் பௌத்த கல்வி மற்றும் கலாசாரத்தைப் பேணுவதற்கு பிரிவெனாக் கல்வி மூலம் வழங்கப்பட்ட பங்களிப்பு அளப்பரியதாகும். ஆரம்ப பிரிவெனாக்கள், மகா பிரிவெனாக்கள் மற்றும் கல்லூரிகளென ஒழுங்கமைக்கப்பட்டுள்ள 750 பிரிவெனாக்களில் தற்போது 64,606 பிக்கு மாணவர்களும் சாதாரண மாணவர்களும் கல்வி கற்கின்றதோடு, 6,495 ஆசிரிய தேரோக்களும் ஆசிரியர்களும் இந்த பிரிவெனாக்களில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரிவெனாக்கள் மூலம் நிறைவேற்றப்படும் சேவை மற்றும் அதற்காக பங்களிப்பு வழங்கும் ஆசிரியர்களின் சேவையை மெச்சுவதற்கும் பிருவெனா மாணவர்களின் ஆக்கத்திறன்களை மதிப்பிடுவதற்குமாக வருடாந்தம் நடாத்தப்படும் பிரிவெனா தின விழாவை இந்த ஆண்டில் 2016 யூலை 16 ஆம் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் கண்டி கெட்டம்பே மைதானத்தில் நடாத்தும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.