• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டம்
- நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் கருத்திட்டமானது உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களினதும் அபிவிருத்தியாளர்களினதும் பங்குபற்றுதலுடன் நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான எட்டு (08) காணித்துண்டுகளில் நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம், கருத்திட்டப் பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக பானந்துரை, ஹோமாகம (ஜல்தர கட்டம் II), யக்கல மற்றும் றாகம பிரதேசங்களில் வீடமைப்புக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் குண்டசாலை, ஹோமாகம, காலி மற்றும் நிட்டம்புவ பிரதேசங்களில் வீடமைப்புக் கருத்திட்டங்களுக்காக மீண்டும் கருத்திட்ட பிரேரிப்புகளைக் கோருவதற்கும் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட வழிப்படுத்தல் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளமை பற்றி வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.