• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இயற்கை இறப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளின் சங்கத்தின் இயற்கை இறப்பர் விலையை நிலைப்படுத்துவதற்கான நிபுணர்கள் குழுவின் மூன்றாவது கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல்
- இலங்கை அடங்கலாக இயற்கை இறப்பர் உற்பத்தி செய்யும் 11 நாடுகள் உறுப்புரிமை கொண்டுள்ள சர்வதேச அமைப்பொன்றான இயற்கை இறப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளின் சங்கத்தினால் இயற்கை இறப்பர் விலையை நிலைப்படுத்துவதற்கான நிபுணர்கள் குழுவின் மூன்றாவது கூட்டத்தை 2016 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.