• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்துதல்
- இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின்முன் உள்ள சவால்களையும் வரையறைகளையும் இனங்கண்டும் பல்கலைக்கழகத்தின் எதிர்கால பாதுகாப்பினை நோக்கமாகக் கொண்டும் தற்போதைய உலகத்தரத்திற்கு ஏற்ற விதத்திலும் சட்டத்தின் நோக்கங்களுக்குப் பாதிப்பேற்படாத விதத்திலும் இந்த நோக்கங்களை உயர்மட்டத்தில் நிறைவேற்றும் பொருட்டும் 1995 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்துவதற்காக பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.