• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி அமைச்சின் 2015 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை
- 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தின் 13 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் கீழ் இறுதி வரவுசெலவுத்திட்ட நிலைமை பற்றிய அறிக்கை (வருடாந்த அறிக்கை) நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் அடுத்து வரும் ஆண்டின் மே மாதம் 31 ஆம் திகதியன்றுக்கு முன்னர் வெளியிடுதல் வேண்டும். இதற்கமைவாக 2015 ஆம் நிதியாண்டின் அரசாங்க நிதி செயற்பாடு தொடர்பில் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் உள்ளடக்கிய 13 அத்தியாங்களைக் கொண்ட நிதி அமைச்சின் 2015 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.