• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹொரண, கோனபொலவில் ரயர் தொழிற்சாலையொன்றை நிருமாணிப்பதற்காக காணித்துண்டொன்றை குறித்தொதுக்குதல்
- புதிதாக உற்பத்தி செய்யப்படும் மற்றும் மீள நிரப்பப்படும் இறப்பர் ரயர்களையும் ரியுபுகளையும் ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை வருடாந்தம் ஈட்டும் வருமானம் 471 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகுமென்பதோடு, இது இலங்கையின் மொத்த இறப்பர் ஏற்றுமதியின் 61.9 சதவீதமென கணக்கிடப்பட்டுள்ளது. இந்த துறைசார்ந்த கைத்தொழிலை மேலும் விருத்தி செய்வதற்காக 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட முதலீட்டுடன் ஆண்டொன்றுக்கு 3 மில்லியன் ரயர்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட தொழிற்சாலையொன்றை முதலீட்டுச் சபை கருத்திட்டமொன்றாக ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.