• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தைத் திருத்துதல்
- அரசியல் தீர்மானங்களை எடுக்கும் செயற்பாட்டில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஆகக்குறைந்து 25 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக மாகாண சபை தேர்தலின் போது ஒவ்வொரு மாகாண சபைக்காகவும் அந்தந்த அரசியல் கட்சிகளினால் அல்லது சுயாதீன குழுக்களினால் முன்வைக்கப்படும் நியமனப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முழு அபேட்சகர்களின் எண்ணிக்கையில் 30 சதவீதத்திற்கு குறையாத எண்ணிக்கை பெண் அபேட்சகர்களை கொண்டிருக்க வேண்டுமென 1988 ஆம் ஆண்டில் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திற்கு ஏற்பாடுகளை உள்ளடக்கி வரையப்பட்ட மாகாண சபைகள் (திருத்த) சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.