• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வேயாங்கொட நகரத்திலிருந்து வேயாங்கொட விசேட பொருளாதார மத்திய நிலையம் வரையிலான நுழைவுப் பாதையை அமைப்பதற்காக காணிகளைக் குறித்தொதுக்குதல்
- 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வேயாங்கொட விசேட பொருளாதார மத்திய நிலையமானது 70 வர்த்தக கூறுகளையும் 06 களஞ்சியங்களையும் கொண்டுள்ளதோடு, பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்கும் மிக முக்கியமான வர்த்தக மையமொன்றாகும். வேயாங்கொட நகரத்திலிருந்து வேயாங்கொட விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு தற்போதுள்ள நுழைவுப் பாதை கணிசமான அளவு தூரத்தை கொண்டுள்ளமையினால் இந்த நிலையத்திற்கு செல்வதற்கு நுகர்வோர் அக்கறையின்றி இருப்பதோடு, பொருளாதார மத்திய நிலையத்தின் அருகாமையில் செல்லும் நிட்டம்புவ - கட்டுநாயக்க பிரதான பாதையிலிருந்து இந்த மத்திய நிலையத்திற்கு நுழைவுப்பாதையொன்று இல்லாமையினால் இந்தப் பாதையைப் பயன்படுத்தும் தம்புள்ளை, வெலிமடை, நுவரெலியா, போன்ற பல்வேறு பிரதேசங்களிலிருந்து மரக்கறி உட்பட ஏனைய பொருட்களை கொண்டுவரும் லொறி உரிமையாளர்களும் இங்கு வருவதற்கு பெரிதாக விரும்புவதில்லை. இந்த நிலைமை பொருளாதார மத்திய நிலைய வளர்ச்சிக்கு பிரதிகூலமான தாக்கத்தைச் செலுத்தியுள்ளதோடு, இந்த நிலைமையை தவிர்ப்பதற்காக நிட்டம்புவ - கட்டுநாயக்க பிரதான பாதைக்கு நேரடி நுழைவினை வழங்கி பொருளாதார மத்திய நிலையத்திற்கு மிக இலகுவான நுழைவுப் பாதையொன்றை நிருமாணிப்பதற்குத் தேவையான உணவு திணைக்களத்திற்குச் சொந்தமான இந்தப் பிரதேசத்திலுள்ள 40 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணியை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினாலும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.