• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பல்கேரியா குடியரசுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை
- ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடொன்றான பல்கேரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறும் மொத்த விற்பனவானது 2015 ஆம் ஆண்டில் 7.75 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் பொருளாதாரத்தை உறவுகளை மேம்படுத்துவதற்காக புதிய வழிகளை ஆராய்வதற்கும் இனங்கண்ட புதிய துறைகளின் ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மேம்படுத்துவதற்குமாக நாடுகளுக்கிடையிலான பொறிமுறையொன்றை உருவாக்கிக் கொள்வதற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பல்கேரியா குடியரசுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.