• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சேவை வர்த்தகம் சம்பந்தமாக சார்க் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துதல்
- வலய வர்த்தக நடவடிக்கைகளை சேவைகள் துறைக்கு விரிவுபடுத்தும் மேலதிக நடவடிக்கையொன்றாக 2016 ஆம் ஆண்டில் பூட்டானில் நடாத்தப்பட்ட தெற்காசிய வலய ஒத்துழைப்பு அமைப்பின் 16 ஆவது கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகளின் அரச தலைவர்கள் தெற்காசிய வலய நாடுகளின் சேவைகள் வர்த்தகத்துக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இதற்குரிய பணிக்கட்டமைப்பு உடன்படிக்கையை (SATIS Framework Agreement) நடைமுறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு உறுப்பு நாடுகளினதும் பொறுப்பு ஆவணங்கள் சம்பந்தமான பணிகள் முடிவுறுத்தப்பட வேண்டியுள்ளது. இலங்கை இந்த உடன்படிக்கையில் I ஆம் குழுவில் அதாவது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் குழுவில் உள்ளதோடு, இதற்கமைவாக உலக வர்த்தக அமைப்பின் தோகா சுற்றிலே இலங்கை உடன்பட்ட தொலைத்தொடர்பாடல் சேவைகள், நிதிச் சேவைகள், சுற்றுலா மற்றும் போக்குவரத்து பணிகள் சம்பந்தமான சேவைகள் போன்ற துறைகளுக்கு மேலதிகமாக கப்பல் சம்பந்தமான தொழிற்பாட்டாளர்கள் இல்லாத கூலி மற்றும் குத்தகை சேவைகளையும் நிலவழி போக்குவரத்து என்னும் புதிய துறைகளை பொறுப்பு ஆவணத்தில் சேர்த்து SATIS உடன்படிக்கையின் கீழ் இந்த சேவைகளை திறந்து விடுவதற்கும் இந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவதற்குரிய அரசாங்க நிறுவனங்களுக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வைப்பதற்குமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.