• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழில் திணைக்களத்தின் பணிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் பொருட்டிலான கணனி மயப்படுத்தும் கருத்திட்டம்
- சருவதேச தொழில் அமைப்பின் சமவாயங்களுக்கும் சிபாரிசுகளுக்கும் அமைவாக ஊழியர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு, அரசாங்கத்தினால் காலத்துக்கு காலம் விதிக்கப்பட்டுள்ள சேவை நிலைமைகள், நிபந்தனைகள் மற்றும் ஊழியர் நலன்புரி போன்றவற்றுக்குரிய ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் அதேபோன்று ஊழியர்கள் தமது தொழிலில் ஈடுபடும் போது நிகழும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பும் தொழில் திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த திணைக்களத்தின் பிரதான பணிகளை கனணிமயப்படுத்தும் நோக்கில் மென்பொருள் ஒன்றை அபிவிருத்தி செய்யும் பணிகள் (Labour Inspection System Application - LISA) சருவதேச தொழில் அமைப்பின் ஒத்தாசையுடன் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மையான தரவுகளைப் பெற்றுக் கொள்ளல், நிறுவன விசாரணைகளின் போது ஏற்படும் இரட்டிப்பு பணிகளைத் தடுத்தல், திணைக்களத்தின் பணிகளை வினைத்திறனுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் விருத்தி செய்தல், ஊழியர் ஊக்கப்படுத்தும் வழிமுறையொன்றை வகுத்தமைத்தல் இதன் அடிப்படை நோக்கமாகும். இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்குத் தேவையான பணியாட் டொகுதியையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொண்டு 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் இந்த நிகழ்சித்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதென தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.