• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீரிகம செத்செவன அரசாங்க முதியோர் இல்லத்தை புனரமைப்பதற்கும் நீர்த்தாங்கி கோபுரமொன்றை நிருமாணிப்பதற்காகவும் நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குதல்
- இலங்கையில் முதியவர்கள் தற்போது மொத்த சனத்தொகையின் 12.4 சதவீதமாவர். இலங்கையில் முதியவர்களின் தொகையானது துரிதமாக அதிகரித்து வருவதோடு, இந்த தொகையைானது 2041 ஆம் ஆண்டளவில் 24.8 சதவீதத்தை விஞ்சுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் முதியவர்களின் தொகை பற்றி கவனத்திற்கு எடுத்துக் கொள்ளும் போது கௌரவத்தையும் அபிமானத்தையும் பாதுகாக்கும் விதத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் இறுதிக் காலத்தை கழிப்பதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பத்தினை வழங்குவது அத்தியாவசியமானதாகும். மாண்புமிகு டி.எஸ்.சேனநாயக்கா அவர்களை நினைவுகூரும் முகமாக தாபிக்கப்பட்டுள்ள தற்போது 265 வயோதிபர்கள் தங்கியிருக்கும் மீரிகம செத்செவன அரசாங்க முதியோர் இல்லம் மேல் மாகாணத்தினுள் அமைந்துள்ள அரசாங்கத்தினால் பராமரிக்கப்பட்டுவரும் அளவில் பெரிய முதியோர் இல்லமொன்றாகும். இந்த முதியோர் இல்லத்தின் நீர் விநியோகம் அடங்கலாக அடிப்படை திருத்தவேலைகளுக்கு நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்கும் பொருட்டு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.