• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகவறுமையான குடும்பங்களுக்குமான வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
- சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மிக வறுமையான நிலைமையிலுள்ள குடும்பங்களுக்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று யூன் மாதம் 23 ஆம் திகதியன்று வரும் தேசிய வீடமைப்பு திகதியிலிருந்து ஆரம்பிக்கும் "தேசிய வீடமைப்பு வாரம்" என்பதை முதன்மையாகக் கொண்டு ஆரம்பித்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினாலும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.