• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடந்த சில தினங்காள நிலவிய வௌ்ள அனர்த்தம் காரணமாக மேல் மாகாணத்தில் சில பிரதேசங்களில் திரண்டுள்ள குப்பைகளை அகற்றுதல்
- கடந்த சில தினங்காள நிலவிய வௌ்ள அனர்த்தம் காரணமாக கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவு உட்பட மேல் மாகாணத்தில் சில பிரதேசங்களில் திரண்டுள்ள குப்பைகளை துரிதமாக அகற்றும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை தரைப்படை, சிவில் பாதுகாப்பு படையணி, மேல் மாகாணசபை, உள்ளூராட்சி நிறுவனம், கமநலசேவைகள் திணைக்களம் மற்றும் இலங்கை காணி நில மீட்பு, அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களின் உதவியுடன் கடந்த ஏழு நாட்களுக்குள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதென்பதுவும் இந்த காலப்பகுதிக்குள் சுமார் 5,440 மெற்றிக்தொன் குப்பை அகற்றப்பட்டுள்ள தென்பதுவும் மேலும் அகற்றப்படவேண்டிய சுமார் 2,000 மெற்றிக்தொன் அளவிலான குப்பை குவிந்துள்ளமையினால், இந்த குப்பைகளை அகற்றும் கூட்டு செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதியை 2016‑06‑12 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தென்பதுவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.