• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துருக்கி குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையிலான இராசதந்திரப் பயிற்சி, தகவல் பரிமாற்றல், ஆவணப்படுத்தல் தொடர்பிலான ஒத்துழைப்பின் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கை
- இராசதந்திரப் பயிற்சி, அரசியல், பொருளாதார, கலாசார அல்லது பிற துறைகளில் இராசதந்திர மற்றும் சருவதேச உறவுகளுக்குரிய சருவதேச சட்டங்கள் உட்பட பிற கற்கை துறைகளில் தொடர்பில் தகவல்கள் மற்றும் ஆவணங்களை இருநாடுகளினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு களுக்கிடையில் பரிமாறிக் கொள்வது சம்பந்தமாக பரஸ்பரம் நலன் மிக்க ஒத்து ழைப்பினை விருத்தி செய்துகொள்வதன் மூலம் இலங்கைக்கும் துருக்கிக்கு மிடையில் நெருங்கிய நட்புறவு மிக்க உறவுகளை அதிகரித்துக் கொள்வது மேற்போந்த உடன்படிக்கையைச் செய்துகொள்வதற்கான நோக்கமாகும். இதற் கமைவாக, துருக்கிக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு மெவூலூட் கவுசொக்லு அவர்கள் 2016 யூன் மாதம் இலங்கையில் மேற்கொள்ள வுள்ள விஜயத்தின் போது இருநாடுகளினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு களுக்கிடையில் இராசதந்திரப் பயிற்சி, தகவல் பரிமாற்றல், ஆவணப்படுத்தல் தொடர்பிலான மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்து கொள்ளும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.