• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறந்த மற்றும் காணாமல் போனவர்களை பதிவுசெய்தல்
- எவ்வித தடையங்களுமின்றி விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிகழ்ந்த மோதல்களின் போது இதன் காரணமாக அல்லது இந்த மோதல் சம்பந்தமாக அல்லது இந்த மோதலின் பக்கவிளைவாக அல்லது அரசியல் அமைதியின்மை காரணமாக அத்துடன் / அல்லது மக்கள் கிளர்ச்சி காரணமாக மற்றும் பலவந்தமாக செய்யப்பட்ட காணாமற்போகச் செய்தல் காரணமாக காணாமற் போயுள்ளவா்களை பதிவு செய்யும் தேவை எழுந்துள்ளது. அத்தகைய பதிவொன்றின் மூலம் அவ்வாறு காணாமற் போணவர்களின் உறவினர்களுக்கு "உரிய ஆள் உயிரோடு காணக்கிடைக்கவில்லையென்னும் சான்றிதழை" வழங்கும் ஆற்றல் கிடைப்பதோடு, காணாமற்போன ஆளுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஆதனங்களை தற்காலிகமாக முகாமிப்பதற்கும் காணாமற்போனவர்களின் பிள்ளைகள் சார்பில் தற்காலிக பொறுப்பினை வகிப்பதற்கும் சமூக நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக உரியதாகும் நலன்களுக்காக விண்ணப்பிப்பதற்கும் காணாமற்போனவர்கள் சார்பில் இயைபுள்ள அதிகாரபீடங்கள் முன்னே தோன்றுவதற்கும் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதற்கமைவாக, காணாமற்போனவர்கள் சார்பில் "உரிய ஆள் உயிரோடு காணக்கிடைக்கவில்லையென்னும் சான்றிதழை" வழங்குவதற்கும் காணாமற்போனவர் உயிருடன் இருக்கின்றாரென அல்லது மரணித்துள்ளாரென உறுதிப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் குறித்த ஆள் உயிரோடு காணக்கிடைக்காமை பற்றி வழங்கப்பட்டுள்ள சான்றிதழை இரத்துச் செய்வதற்கு அல்லது குறித்த ஆள் சார்பில் இறப்பு சான்றிதழொன்றை வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்யும் விதத்தில் 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்பு பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.