• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - ஒப்பந்த இலக்கம் 01 - பின்னதூவயிலிருந்து கோதாகொட வரையிலான (30.80 கிலோமீற்றரி லிருந்து 45.00 கிலோமீற்றர் வரை) பகுதியை நிருமாணித்தல் - கடன் தொகையில் மீதியாகவுள்ள தொகையை பயன்படுத்துதல்
- தெற்கு அதிவேகப் பாதையின் பின்னதூவயிலிருந்து கொடகம வரையிலான தெற்கு பகுதியை நிருமாணிப்பதற்காக சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடன் தொகையின் சேமிப்பினைப் பயன்படுத்தி கருத்திட்டத்தின் கீழுள்ள 11 பிராந்திய வீதிகளைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதோடு, கடன்தொகையின் செல்லுபடியாகும் காலம் முடிவடைவதற்கு மேலும் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியொன்று உள்ளமையை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு குறித்த வீதி புனரமைப்புப் பணிகளை பூர்த்தி செய்யும் எதிர்பார்ப்புடன் தேவையான நிதியங்களை முகாமித்துக் கொள்ளும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.