• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலை சீருடைத் துணிக்குப் பதிலாக வவுச்சர்களை வழங்குதல் - 2017
- பாடசாலை சீருடைத் துணிக்குப் பதிலாக வவுச்சர்களை வழங்குதலானது 2015 ஆம் ஆண்டில் திசெம்பர் பாடசாலை தவணை இறுதியில்' முதன்முதலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் அரசாங்கம் எதிர்பார்த்தவாறு உரிய தரத்திலான சீருடைத் துணிகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கு பெற்றோருக்கு இயலுமானோதோடு, சீருடைத் துணிகளைக் களஞ்சியப்படுத்தல், பொதியிடல், கொண்டுசெல்லல், தரப்பரிசோதனை போன்ற பணிகளுக்கு முன்பு அரசாங்கத்தினால் உறப்பட்ட செலவும் காலமும் எஞ்சியுள்ளது. இதற்கமைவாக கடந்த ஆண்டில் பெற்ற அனுபவத்துடன் நிலவும் குறைபாடுகளை குறைத்துக் கொண்டு சந்தையில் துணி விலை அதிகரிப்பிற்கு ஒத்திசைவாக நியாயமான மேலதிகப் பெறுமதியினை வவுச்சரில் சேர்த்து அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் உதவிபெறும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரிவெனாக்களிலுள்ள மாணவ பிக்குமார்களுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் வழங்குவதற்கும் இவ்வாறே இந்த நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்குமாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.