• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முந்தெனியஆறு ஆற்றுப்படுகை அபிவிருத்திக் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
- இலங்கையின் தென்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள பெரும்பாலும் பயன்படுத்தப்படாத நீர்வளங்களைக் கொண்ட ஆற்றுப்படுகையொன்றாக கருதப்படும் முந்தெனியஆறு ஆற்றுப்படுகை சார்ந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தழுவப்படுகின்றன. இதன்கீழ் கல்ஓடை ஆறு மற்றும் மகாஓயா என்பவற்றுக்கு குறுக்காக நிருமாணிக்கப்படவுள்ள முறையே 75 கனமீற்றர் மற்றும் 80 கனமீற்றர் கொள்ளளவைக் கொண்ட நவீன பல் பணி அபிவிருத்தி நீர்த்தேக்கங்கள் இரண்டின் மூலம் தற்போது பயிர்செய்யப்பட்டு வரும் 3,950 ஹெக்டயார் பூமி பிரதேசத்தில் சிறு மற்றும் பெருபோகங்கள் இரண்டிலும் பயிர்ச் செய்கைகளை அதிகரிப்பதற்கும் 2,800 ஹெக்டயார்கள் கொண்ட பிரதேசத்திற்கு புதிதாக நீர்ப்பாசனம் வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. கித்துல்வெவ ரேகம் குளத்தை இணைப்பதும் இந்த கருத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, வௌ்ளப்பெருக்கு கட்டுப்பாடு மற்றும் நீர் மின் உற்பத்தி அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் 44 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு குடிப்பதற்கு சிறந்த குடிநீர் வழங்குவதும் இந்தக் கருத்திட்டத்தின் கீழ் செய்யப்படவுள்ளது. இதற்கமைவாக, முந்தெனியஆறு ஆற்றுப்படுகை அபிவிருத்திக் கருத்திட்டத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகளை பயன்படுத்தி நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.