• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொனராகலை மாவட்டத்தில் கும்புக்கன் ஓயா நீர்த்தேக்க கருத்திட்டம்
- இன்னமும் பின்னடைந்த மாவட்டமொன்றாகவுள்ள மொனராகலை மாவட்டத்தின் வளமான காணிகளையும் நீர்வளத்தையும் மக்களின் மேம்பாட்டுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதன் மூலம் பிரதேசத்தின் வறுமை நிலையை இல்லாதொழிக்க முடியும். உத்தேச கும்புக்கன் ஓயா நீர்த்தேக்க கருத்திட்டத்தின் மூலம் 48 கன மீற்றர் கொள்ளளவைக் கொண்ட நீர்த்தேக்கமொன்று கும்புக்கன் ஓயாவுக்கு குறுக்காக நிருமாணிக்கப்படுவதோடு, அதன் மூலம் புத்தள, மொனராகலை மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களில் புதிதாக 4,280 ஹெக்டயார் காணிகளுக்கும் தற்போது பயிர் செய்யப்பட்டுள்ள 1,255 ஹெக்டயார் கமத்தொழில் காணிகளுக்கும் நீர்ப்பாசனம் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று மொனராகலை, நக்கல, கும்புக்கன ஒக்கன்பிட்டிய மற்றும் புத்தள ஆகிய பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும் நீர் மின்சார உற்பத்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதற்கமைவாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் நிதி பெற்றுக் கொண்டு கும்புக்கன் ஓயா நீர்தேக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.