• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பஹலமல்வத்து ஓயா நீர்த்தேக்க கருத்திட்டம்
- உத்தேச பஹலமல்வத்து ஓயா நீர்த்தேக்க கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் அநுராதபுரம், வவுனியா, மன்னர் ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு நேரடி நன்மைகள் கிடைக்கப் பெறுவததோடு, மன்னார் மாவட்டத்தின் யோதவெவ மற்றும் அகதிமுறுப்பு நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் தற்போது உரிய நீர்ப்பாசன வசதிகள் கிடைக்கப்பெறாத பயிர்ச்செய்கை காணிகள் 12,425 ஹெக்டயார்களை சிறு மற்றும் பெரும் போகங்களில் வெற்றிகரமாக பயிர்ச்செய்யவும் முடியுமாகும். கருத்திட்டத்தின் சுற்றாடல் பாதிப்பு பற்றிய சாத்தியத்தகவாய்வு அறிக்கை மற்றும் தொல்பொருளியல் மதிப்பீட்டு அறிக்கை என்பன தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றதோடு, கருத்திட்டப் பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் சுமார் 160 குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டும் வருகின்றது. கருத்திட்டத்தின் சாத்தியத்தகவாய்வு அறிக்கையின் படி மிக பயனுள்ள முதலீடொன்றாக இனங்காணப்பட்டுள்ளமையினால், நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு பஹலமல்வத்து ஓயா நீர்த்தேக்க கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினாலும் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையின் கொள்கை ரீதியிலான அங்கீகாரம் வழங்கப்பட்டது.