• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொரகஹந்த - களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- வடமத்திய மாகாணத்தின் கமத்தொழில் நடவடிக்கைகளின்பால் தாக்கத்தை செலுத்தியுள்ள நீர் பற்றாக்குறைக்கு தீர்வொன்று வழங்குவதனையும் அநுராதபுரம், பொலன்நறுவை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதனையும் குறியிலக்காகக் கொண்டு மகாவலி அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக 2007 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்ட மொரகஹந்த - களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டமானது தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பாரிய பல்பணி ஆற்றுப்படுகை அபிவிருத்தி கருத்திட்டமாகும். கருத்திட்டத்தின் நிருமாணிப்பு பணிகளில் சுமார் 65 சதவீதம் ஏற்கனவே முடிவடைந்துள்ளதோடு, 2016 ஆம் ஆண்டின் பெரும்போகத்தில் மழை ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பும் வேலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமையினால், கருத்திட்டம் சார்பில் காணி சுவீகரிப்பதன் விளைவாக பாதிக்கப்படும் நாவுல மற்றும் லக்கல - பள்ளேகம பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 2,512 குடும்பங்களை துரிதமாக பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. இவர்களுள் 984 குடும்பங்களுக்கு ஏற்கனவே நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதோடு, கருத்திட்டத்தை திட்டமிடப்பட்டவாறு உரிய காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் இந்த கருத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்படும் மீதி 2,228 குடும்பங்களை குறித்த பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்காக நியாயமான வழிமுறையொன்றுக்கு அமைவாக நட்டஈடு வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.