• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொலன்னாவ பிரதேசத்திலுள்ள கால்வாய்களை துப்பரவு செய்வதற்கு துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
- கொலன்னாவ பிரதேசத்தில் நீர்தேங்கி நிற்கும் பிரதேசங்களாக இனங்காணப்பட்டிருந்த சதுப்பு நிலங்களில் அத்துமீறிய நிலமீட்புகளும் குடியிருப்புகளும் காரணமாக நீர்தேங்கி நிற்க இயலாத நிலை உருவாகியுள்ளமையினால், இந்தப் பிரதேசம் வௌ்ளப்பெருக்கு அபாயத்திற்கு உட்படுமென இனங்காணப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திணைக்களமும் காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனமும் இணைந்து மேற்கொண்ட ஆரம்ப ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாவது நீர் வழிந்தோடுவதற்காகவுள்ள கால்வாய் முறைமை உரிய வகையில் பராமரிக்கப்படாமையினால் வௌ்ளப்பெருக்கு நிலைமையானது மேலும் தீவிரமடைந்துள்ளதென்பதாகும். நீர்வழிந்தோடு வதற்காகவுள்ள கால்வாய்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டிருந்தால் கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்தப் பிரதேசங்களில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு நிலைமையை கட்டுப்படுத்தியிருக்கலாம். இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் உருவாகக் கூடிய வௌ்ளப்பெருக்கு அனர்த்த நிலைமையை தடுக்கும் பொருட்டு களனி கங்கையின் கீழ் மட்ட அணைக்கட்டுக்களில் இருந்து நீர் பெருக்கெடுக்காமல் இருப்பதனை தடுப்பதற்காக கால்வாய்களையும் அதனோடிணைந்த இரண்டாம் நிலைக் கால்வாய்களையும் துப்பரவாக்கி புனரமைக்கும் பொருட்டு துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினாலும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.