• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அண்மையில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக மேல் மாகாணத்தின் சில பிரதேசங்களில் திரண்ட குப்பைகளை அகற்றுதல்
- கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு அனர்த்தத்திற்குள்ளான பிரதேசங்களிலுள்ள வீடுகளில் தளபாடங்கள் பெரும்பாலானவை பாவிக்க முடியாத நிலைக்கு உட்பட்டு கழிவுகளாக வீடுகளிலும் பொது இடங்களிலும் பாரிய அளவில் சேர்ந்துள்ளது. 2016‑05‑30 ஆம் திகதியன்று கொட்டிகாவத்த, முல்லேரியாவ பிரதேச சபை அதிகாரபிரதேசத்தில் மாத்திரம் தொடர்ந்தும் அகற்றுவதற்காக எஞ்சியுள்ள குப்பைகளை அகற்றும் பொருட்டு சுமார் 470 தடவைகள் டிரக்டர்களை பயன்படுத்த வேண்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு திரண்டுள்ள கழிவுகள் சுகாதார பிரச்சினைகளுக்கு காரணமாக அமையலாமென்பதனால் துரிதமாக அப்புறப்படுத்த வேண்டியிருந்த போதிலும் அதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமாக தற்போதுள்ள வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் போதுமானதாக இல்லையென அறிக்கையிடப்பட்டுள்ளது. ஆதலால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினதும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினதும் உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் இந்த குப்பைகளை அகற்றுவதற்குத் தேவையான பத்து இயந்திரங்களை ஏழுநாட்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினாலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. -