• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அண்மைய வௌ்ளத்தினால் உடைந்த குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் கால்வாய்களை துரிதமாக பழைய நிலைக்கு கொண்டு வருதல்
- கடந்த நாட்களில் இலங்கை முகங்கொடுத்த வௌ்ளப்பெருக்கு காரணமாக கம்பஹா, கொழும்பு, களுத்துறை, மாத்தளை, கண்டி, அநுராதபுரம், குருநாகல், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, கேகாலை, புத்தளம், நுவரெலியா, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களிலுள்ள குளங்கள், அணைகட்டுகள் மற்றும் கால்வாய்கள் சுமார் 639 அழிவடைந்துள்ளதோடு, நெல் மற்றும் மேலதிக பயிர்கள் பயிர்செய்யப்படும் காணிகளும் பெருமளவில் அழிந்து போயுள்ளன. இதற்கமைவாக நாட்டில் உணவு விநியோகத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொருட்டு அண்மையில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை துரிதமாக பழைய நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு துரித வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.