• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
- கண்டி மற்றும் காலி நகரங்களில் திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 147 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் தொகையொன்று சருவதேச அபிவிருத்தி நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. இதற்கமைவாக, இந்த கடன் தொகையிலிருந்து ஒரு பகுதியைப் பயன்படுத்தி பின்வரும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* கண்டி தர்மாசோக மாவத்தை (பீ 550) 0+000 கிலோ மீற்றரிலிருந்து 3+390 கிலோ மீற்றர் வரை (பூவெலிகட வளைவு அடங்கலாக) புனரமைத்தலும் விருத்தி செய்தலும்.

* கட்டுகஸ்தொட்ட - மடவல - பம்பரல்ல வீதியின் (பீ 205) கட்டுகஸ்தொடயிலிருந்து மடவல வரையிலான (0+000 கிலோ மீற்றரிலிருந்து 6+250 கிலோ மீற்றர்) பகுதியை புனரமைத்தல்.

* மடவல - திகன வீதியின் (பீ 256) மடவலயிலிருந்து திகன வரையிலான (0+000 கிலோ மீற்றரிலிருந்து 8+100 கிலோ மீற்றர்) பகுதியை புனரமைத்தல்.

* கண்டி மத்திய கால்வாயை புனரமைத்தல்