• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய வர்த்தக கல்வி முகாமைத்துவ நிறுவனத்தின் உத்தேச பசுமை பல்கலைக்கழகத்துக்கு தேவையான தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குதலும் பொருத்துதலும்
- ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்டு வரும் தேசிய வர்த்தக கல்வி முகாமைத்துவ நிறுவனத்தின் உத்தேச பசுமை பல்கலைக்கழக கட்டடத்தொகுதிக்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கும் பொருத்துவதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் அனுசரணையான ஆகக்குறைந்த மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.