• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீண்டகாலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை வடக்கு மாகாணத்தில் மீளக்குடியமர்த்துதல்
- வடமாகாணத்தில் நிலவிய மோதல் நிலைமை காரணமாக அங்கு வசித்த சிங்கள மக்கள் தென்பகுதிக்கு வந்ததோடு, பல தலைமுறைகளாக வடமாணத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களும் 1990 ஆம் ஆண்டில் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினால் முழுமையாக வெளியேற்றப்பட்டதன் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் பெருமளவில் நீண்டகாலமாக இதுவரை உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களாக வேறு மாவட்டங்களில் (பரவலாக மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களில்) வசிக்கின்றனர். மதிப்பிடப்பட்டுள்ளவாறு நீண்டகாலமாக இடம்பெயர்ந்து குடியமர்வதற்காக மீண்டும் வடமாகாணத்திற்கு வருகை தரும் சிங்கள குடும்பங்களுக்கு 5,543 வீடுகளும் முஸ்லிம் குடும்பங்களுக்கு 16,120 வீடுகளும் தேவைப்படுவதோடு, மீளக் குடியமர்த்தப்படும் கிராமங்களில் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் கூட விருத்தி செய்யப்பட வேண்டியுள்ளது. வடக்கு மாகாணத்தில் குடியிருந்து நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களை மீளக் குடியமர்த்தும் பணிகளை ஒருங்கிணைத்தல், நடைமுறைப்படுத்தல், மற்றும் மேற்பார்வை செய்தல் என்பன பொருட்டு பொருத்தமான வழிமுறையொன்றை இணங்கியொழுகுவது சம்பந்தமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினாலும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினாலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த விடயம் சம்பந்தமாக பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் மாண்புமிகு பிரதம அமைச்சர் உட்பட ஏனைய அமைச்சர்களையும் கொண்ட குழுவொன்றுக்கு கையளிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.