• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோட்டார் வாகன சட்டத்தை திருத்துதல் (203 ஆம் அத்தியாயம்)
- மோட்டார் வாகன சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், உடைமை மாற்றுதல், சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் அதனோடு இணைந்த பணிகளை நிருவகித்தல் அதேபோன்று வீதிகளை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்தல், சுற்றாடலை பாதுகாத்தல் போன்றவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும். ஆயினும், நவீன தொழினுட்பத்தை இதற்காக பயன்படுத்திக் கொள்தல் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நோக்கங்களை நிகழ்கால தேவைக்கும் தரத்திற்கும் ஏற்றவாறு மோட்டார் வாகன சட்டத்தை (203 ஆம் அத்தியாயம்) திருத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.