• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யானைகள் மாறும் இடங்களை இனங்காணுதலும் இந்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துதலும்
- காட்டு யானைகள் - மனித மோதல்கள் காரணமாக வருடாந்தம் 250 க்கும் மேற்பட்ட யானைகளும் சுமார் 60 - 70 வரை மனித உயிர்களும் இல்லாமற்போவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வனவுயிர் பாதுகாப்பு திணைக்களத்தினால் தற்போது இணங்கியொழுகப்படும் காட்டு யானைகளை விரட்டுதல் அவற்றைப் பிடித்து வேறு பிரதேசங்களில் விடுவித்தல் போன்ற நடவடிக்கைகள் சாத்தியமற்றதென்பதுவும் காட்டு யானைகளை அவற்றின் வாழ்விடங்களிருந்து அப்புறப்படுத்த முடியாதென்பதுவும் ஆராய்ச்சி ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று வேறு இடத்தில் விடப்பட்டு மீண்டும் அவற்றின் வாழ்விடங்களுக்கு வரமுடியாமற்போகும் காட்டு யானைகள் அவற்றின் புதிய வாழ்விடங்களில் முன்னரைவிட குழப்பமடைந்த நிலையில் இருக்குமென அவதானிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட நாடளாவிய யானைகள் தொடர்புபட்ட அளவைக்கமைவாக இலங்கைக் காடுகளில் 5,879 காட்டு யானைகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது காடுகளில் சுமார் 6,000 காட்டு யானைகள் உள்ளதென கருதப்படுகின்றது. நாட்டிலுள்ள காட்டு யானைகளின் 67 சதவீதம் வனவுயிர் பாதுகாப்புத் திணைக்களத்தின் சரணாலயங்களில் 30 சதவீதம் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் சரணாலயங்களில் 3 சதவீதம் சரணாலயங்களுக்கு வௌியே சிறிய காடுகளிலும் வசிக்கின்றதோடு, காட்டு யானைகள் இந்த காடுகளுக்கு இடையில் இடம்மாறுவது அடிக்கடி நிகழுகின்றது. ஒதுக்குப் பிரதேசங்களுக்கு வௌியேயுள்ள காட்டு யானைகள் வசிக்கும் மற்றும் அவை செல்லும் பெரும்பாலான பிரதேசங்கள் காணி உரிமையாளர்கள், அத்துமிறிய குடியிருப்பாளர்கள் மற்றும் உரிமப்பத்திர பயிர்ச்செய்கையாளர்கள் ஆகியோர்களினால் பயன்படுத்தப்படுகின்றன. காட்டு யானைகள் - மனித மோதலைக் குறைக்கும் நீண்டகால தீர்வொன்றாக யானைகள் நடமாடும் பாதைகளை ஆகக்குறைந்தது 500 மீற்றர் அகலத்தைக் கொண்ட பிரதேசமாக ஒதுக்கி வைப்பதும் அத்தகைய காட்டு யானைகள் நடமாடும் பாதைகளுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கும் அல்லது பயிர்ச்செய்கைகளில் ஈடுபடும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாத விதத்தில் அவர்களுக்கு மாற்றுக்காணிகள் அல்லது நட்டஈடு வழங்கும் வழிமுறையொன்றின் கீழ் கட்டம் கட்டமாக காட்டு யானைகள் நடமாடும் பாதைகளிலிருந்து அப்புறப்படுத்தவதற்குமாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.