• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க பொறியியல் தொழினுட்பவியல் நிறுவகத்தினை மேம்படுத்தி தரமுயர்த்துவதற்கான கருத்திட்டம்
- கட்டுநாயக்க பொறியியல் தொழினுட்பவியல் நிறுவனம் 1985 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதோடு, அது நிருமாணிப்பு, வடிவமைப்பு, நீர் சுற்றாடல், நெடுஞ்சாலைகள், புகையிரத பாதைகள், மின்சாரம், மின்னியல், தொலைத்தொடர்பாடல், இயந்திரம், சமுத்திரம் போன்ற விசேட பொறியியல் துறைகளுக்குரிய பாடநெறிகளையும் பொதுவான பாடநெறிகளையும் நடாத்தி வருகின்றது. இந்த நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பாடநெறிகளில் சேர்வதற்கு வருடாந்தம் 2000 க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கின்ற போதிலும் அதிலிருந்து இணைத்துக் கொள்ள முடியுமாவது சுமார் 450 பேர்களாவர். கடந்த பல வருடங்களாக இந்த நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான மட்டத்தில் அதிகரித்திருந்தபோதிலும் அதற்கு ஒருங்கிணைவாக விரிவுரை மண்டபங்கள், உபகரணங்கள் மற்றும் தேவையான கல்விசார் பதவியணி போன்ற வசதிகள் போதுமானவாறு அதிகரிக்கப்பட வில்லை. இதற்கமைவாக இந்த நிறுவனத்திற்கு நவீன தொழினுட்பத்தை அறிமுகப்படுத்தும் மற்றும் உட்டகட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் முக்கியத்துவம் இனங்காணப்பட்டுள்ளதோடு, அதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதிமேதகைய சனாதிபதி அவர்கள் ஒஸ்ரியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் விளைவாகவும் அதன் பின்னர் நிதி அமைச்சரினால் செய்யப்பட்ட கலந்துரையாடல்களின் பெறுபேற்றின் அடிப்படையிலும் கட்டுநாயக்க பொறியியல் தொழினுட்பவியல் நிறுவகத்தை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்து பொருட்டு 9.5 மில்லியன் யூரோக்களைக் கொண்ட நிதி வசதிகளை வழங்குவதற்கு ஒஸ்ரியாவின் Raiffeisen Bank International நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக அவ்வாறு வழங்கப்படும் 9.5 மில்லியன் யூரோக்களை ஆகக் கூடுதலாகப் பயன்படுத்தி கட்டுநாயக்க பொறியியல் தொழினுட்பவியல் நிறுவகத்தை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.