• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணாமற் போனோர் தொடர்பில் அலுவலகமொன்றைத் தாபித்தல்
- கடந்த காலத்தில் காணாமற்போயுள்ளதாக அல்லது கண்டறிய முடியாதென அறிக்கையிடப்பட்டுள்ளவர்கள் சம்பந்தமான தகவல்களை அவர்களுடைய உறவினர்களுக்கு வழங்குவதன் மூலம் அத்தகையோரின் நிலைமை சம்பந்தமான உண்மையான தகவல்களை உறவினர்களுக்கு அறியச் செய்விக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இத்தகைய நிலைமைகளுக்கு முகம் கொடுத்துள்ளவர்களின் குடும்பங்களை மீள ஒன்றுசேர்ப்பதற்கும் காணமற்போனவர்கள் சம்பந்தமாக அந்தக் குடும்பங்களுக்கு இறுதி முடிவுக்கு வருவதற்கும் அந்தக் குடும்பங்களுக்கு நட்டஈடு அல்லது வேறு சலுகைகளையோ உதவிகளையோ வழங்குவதற்கும் இயலுமாகும். இதற்கமைவாக கண்டறிய முடியாதவர்கள் சம்பந்தமாக விசாரணைகளை நடாத்துவதற்கும் அதற்குப் பொருத்தமான வழிமுறைகளை இனங்காண்பதற்கும் கண்டறிய முடியாதவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு தீர்வுகளை வழங்கும் பொருட்டு உரிய அதிகாரபீடங்களுக்கு சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்கும் கண்டறியமுடியாதவர்களினதும் அவர்களுடைய உறவினர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்தல், கண்டறியமுடியாதவர்களுக்கு அவர்களுடைய உறவினர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உரித்துடைய வழிகளைக் கண்டறிதல் அது பற்றி அவர்களுக்கு அறிவித்தல், அரசாங்க நிறுவனங்களினாலும் பிற நிறுவனங்களினாலும் கண்டறியமுடியாதவர்கள் தொடர்பில் திரட்டியுள்ள தரவுகளை ஒன்று திரட்டி மையப்படுத்தப்பட்ட தரவு முறைமையொன்றைப் பேணுதல் போன்ற பணிகளை நிறைவேற்றும் பொருட்டு "காணாமற் போனோர் தொடர்பிலான அலுவலகம்" என அழைக்கப்படும் சுயாதீன நிறுவனமொன்றை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.