• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு இரண்டு (02) மாடிகளைக் கொண்ட விடுதியொன்றை நிருமாணித்தல்
- அகலவத்தை பிரதேசத்தில் தாபிக்கப்பட்டுள்ள தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச கருமமொழிக் கொள்கையை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்க சேவையாளர்களினதும் மொழி கற்கும் மாணவர்களினதும் இருமொழி மும்மொழி ஆற்றலை விருத்தி செய்யும் பொருட்டு வதிவிட மற்றும் வதிவிடம்சாராத பயிற்சி பாடநெறிகளை நடாத்தி வருகின்றது. வதிவிட பாடநெறிகளை நடாத்துவதற்கு நிறுவனத்திற்குச் சொந்தமான விடுதிவசதி போதுமானதாக இல்லாமையினால் ஒரேதடவையில் 90 பேர்களுக்கு விடுதிவசதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் விடுதிக் கட்டட தொகுதியொன்றை 98.8 மில்லியன் ரூபா செலவில் நிருமாணிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்குப்பட்டுள்ளது. இதற்கமைவாக இயைபுள்ள கட்டடத்தின் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களான மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கும் மத்திய பொறியியல் சேவைக் கம்பனிக்கும் வழங்கும் பொருட்டு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.