• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடமேல் மாகாண விளையாட்டுத்துறை கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
- வடமேல் மாகாணத்தினுள் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக வடமேல் மாகாண விளையாட்டுத்துறைக் கட்டடத்தொகுதியை குருநாகல் வெலகெதர விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்த மைதானத்தை மேலும் விளையாட்டுத்துறைக் கட்டடத்தொகுதியொன்றாக அபிவிருத்தி செய்வதற்குப் போதுமான இடவசதி இல்லாமை விளையாட்டுத்துறை அமைச்சினால் கண்டறியப்பட்டுள்ளமையினால் அதற்குப் பதிலாக குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் இரண்டுக்கும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய பிங்கிரிய பொது மைதானத்தையும் அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளப்பட்ட அதற்கு அண்மையில் அமைந்துள்ள கண்டக்குவத்த என்னும் காணியையும் பயன்படுத்தி வடமேல் மாகாண விளையாட்டுத்துறை கட்டடதொகுதியை நிருமாணிக்கும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.