• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் துறையின் நவீன மயப்படுத்தல் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
- கமத்தொழிலின் மொத்த உற்பத்தித் திறனை எடுத்துக் கொண்டால் இலங்கை ஏனைய தெற்காசிய நாடுகளைவிட பின்னடைந்த நிலையில் உள்ளதோடு, அது கடந்த பல தசாப்பத காலமாக மிகக்குறைந்த வளர்ச்சி வீதத்தை சுட்டிக்காட்டுகின்றது. விவசாயிகளினதும் நாட்டினதும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாட்டின் கமத்தொழிலின் விளைவுப் பெருக்கத்தை அதிகரிப்பதற்கும் உயர்பெறுமதியுடன் கூடிய ஏற்றுமதிக் கமத்தொழிலொன்றை உருவாக்குவதற்கு ஏற்ற கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக கமத்தொழிலின் விளைவுப் பெருக்கத்தை மேம்படுத்துதல், சந்தை வாய்ப்புகளை விருத்தி செய்தல் மற்றும் சிறிய அளவிலான விவசாயிகளினதும் கமத்தொழில் வர்த்தகங்கள் மூலம் செய்யப்படும் பெறுமதி சேர்த்தலை விருத்தி செய்யும் நோக்கிலும் கமதொழிலை நவீனமயப்படுத்தும் ஐந்து (05) வருடகால கருத்திட்டமொன்றை உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தினால் வழங்கப்படும் 125 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி கமத்தொழில் அமைச்சும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினாலும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.