• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மீலாத் விழா சார்பில் அமைச்சுக்கள் மட்டத்தில் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- இஸ்லாம் மதத்தை உலகுக்கு போதித்த முகம்மது நபிகள்நாயகம் (ஷல்) அவர்களின் பிறந்த தினமான திசெம்பர் மாதம் 12 ஆம் திகதியன்று தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, அரசாங்க அனுசரணையின் கீழ் தேசிய மீலாத் விழா ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டு வருகின்றது. 2016 ஆம் ஆண்டில் மீலாத் விழாவை நடாத்தும் பொருட்டு 15 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு, தேசிய மீலாத் விழா நிமித்தம் நிகழ்ச்சித்திட்டங்கள் ஏனைய அமைச்சுக்களின் ஒத்தாசையுடன் நடைமுறைப்படுத்துவதற்கும் அவற்றை பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை மையப்படுத்தி நடாத்துவதற்கும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.