• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுதேச மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனத்தை (Post Graduate Institute of Indigenous Medicine - PGIIM) தாபித்தல்
- ஆயுள்வேத மருத்துவ சேவையிலுள்ள மருத்துவ உத்தியோகத்தர்களின் ஆற்றலை விருத்தி செய்வதற்கும் ஆயுள்வேத மருத்துவத்துறையில் பட்டப்பின் படிப்பு நடவடிக்கைகளை மிக தரம் வாய்ந்ததாகவும் நெகிழ்ச்சிகரமானதாகவும் மேற்கொள்வதற்காக "சுதேச மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனம்" ஒன்றைத் தாபிப்பது காலத்தின் தேவையொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், ஆயுள்வேத மருத்து சேவையிலுள்ள மருத்து உத்தியோகத்தர்களுக்கு ஆயுள்வேத, சித்த மற்றும் யுனானி போன்ற துறைகளில் பட்டப்பின்படிப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் சுதேச மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனம் ஒன்றைத் தாபிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.