• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாதகமான கால நிலை காரணமாக நாடு முழுவதும் எழுந்துள்ள அவசர அனர்த்த நிலைமைகளுக்கு நிவாரணமளித்தல்
- கடந்த நாட்களில் நிலவிய கடும் மழை, காற்று மற்றும் மண்சரிவு நிலைமைகள் நாட்டில் 18 மாவட்டங்களை பாதித்துள்ளது. இந்த நிலைமையின் கீழ் 2016-05-16 ஆம் திகதியன்றில் அறிக்கையிடப்பட்டுள்ளவாறு 31,062 குடும்பங்களைச் சேர்ந்த 128,428 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக பலபேர் மரணித்தும் காணாமற் போயுமுள்ளார்களெனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று 12 வீடுகள் முழுமையாகவும் 201 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் நாடு முழுவதும் தாபிக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களின் எண்ணிக்கை 104 ஆகுமென்பதோடு, இந்த நிலையங்களில் 16,968 குடும்பங்களைச் சேர்ந்த 77,265 பேர்கள் தங்கியுள்ளார்கள். இவர்களுக்கு சமைத்த உணவு அடங்கலாக தேவையான வசதிகளை வழங்குதலானது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2016-04-01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்க வரத்தக்கதாக இயற்கை அனர்த்தங்களுக்காகவுள்ள தேசிய காப்புறுதி நிகழச்சித்திட்டத்தின்கீழ் 20 மில்லியன் ரூபாவை தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு வழங்கியுள்ளதோடு, அனர்த்த நிலைமைகள் உள்ள மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களின் கோரிக்கைகளின் பேரில் நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான நிதி வழங்கும் பணிகளும் கூட நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக, அவசர அனர்த்த நிலைமைகளின் போது சமைத்த உணவுக்காக தற்போது ஆள் ஒருவருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் 150/- ரூபாவை 225/- ரூபாவாக அதிகரிப்பதற்கும் உடனடி அனர்த்த சேவைகளை வழங்கும் போது காப்புறுதி திட்டத்தின் கீழ் தற்போது தழுவப்படாத விடயங்கள் சம்பந்தமாக நிவாரணம் அளிப்பதற்குத் தேவையான மேலதிக நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்கிக் கொள்வதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.