• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீட்டுத் தேவைகள் தொடர்பிலான தரவுகளைத் திரட்டுதல்
- இலங்கை முகங்கொடுத்துள்ள முக்கிய பிரச்சினையொன்றான இருப்பிடத் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினதும் மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்களினதும் ஆலோசனையின் மீது நீண்டகால வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இங்கு இலங்கையின் வீட்டுத் தேவை தொடர்பில் பிழையற்றதும் இற்றைப்படுத்தப் பட்டதுமான தகவல்களை பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். 2012 தொகை மதிப்பு மற்றும் இருப்பிடம் சார்ந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அண்ணளவாக ஐந்து (05) வருடங்கள் கடந்துள்ளமையினால், தற்போதைய வீட்டுத் தேவைகளை சரியாக இனங்காணும் பொருட்டு மாவட்ட மற்றும் பிராந்திய மட்டத்தில் வீடுகள் தொடர்பிலான கணக்கெடுப்பு துரிதமாக செய்யப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக 2025 ஆம் ஆண்டளவில் இலங்கையில் சகல வீட்டுத் தேவைகளையும் நிறைவு செய்யும் நோக்கில் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படவுள்ள தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை திட்டமிடுவதற்குத் தேவையான பிழையற்றதும் இற்றைப்படுத்தப்பட்டதுமான தகவல்களையும் / தரவுகளையும் பிரதேச மட்டத்தில் பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட செயலாளர்களையும் பிரதேச செயலாளர்களையும் முதன்மையாகக் கொண்டு மாவட்ட, பிராந்திய மற்றும் கிராமிய மட்டங்களின் அரசாங்க உத்தியோகத்தர்களின் ஒத்தாசையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.