• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பலநாள் கடற்றொழில் கப்பல்களின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் புதிய தொழினுட்பத்தை அறிமுகப்படுத்துதல்
- சமுத்திர கடற்றொழில் சார்பில் இலங்கை அரசாங்கத்தினால் 1950 களிலிருந்து தொடர்ச்சியாக செய்யப்படும் நிவாரணத் திட்டங்கள் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றத்திற்குள்ளாகியுள்ளது. கடற்றொழில் சார்பில் சிறிய மற்றும் நடுத்தர தொழினுட்பங்களை அறிமுகப்படுத்தும் பொருட்டு 2016 ஆம் ஆண்டு சார்பில் 1600 மில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்தினால் குறித்தொதுக்கப்பட்டுள்ள தோடு, இந்த நிதி ஏற்பாடுகளிலிருந்து பெருமளவு இந்த நாட்டின் பல் பொருளாதார வலயத்திற்குள் இயங்கும் பலநாள் கப்பல்களை நவீன தொழினுட்பத்திற்கு அமைவாக, நவீன மயப்படுத்துவதற்கு செலவு செய்யப்படும். கடற்றொழில் கப்பல்களுக்கு டிரான்ஸ்பொன்டர் ஒன்றைப் பொருத்துவதை கட்டாயப்படுத்தி 2011 ஆம் ஆண்டில் கட்டளை விதிக்கப்பட்டிருந்ததோடு, கடற்றொழில் கப்பல்களுக்கு தகுசான்றிதழ்கள் வழங்கும் போது இந்தக் கருவி பொருத்தப்பட்டிருப்பது அத்தியாவசியமானதாகும். இந்தக் கட்டளை பயனுள்ள வகையில் செயற்படுவதனை உறுதிப்படுத்துவதற்கு 2400 டிரான்ஸ்பொண்டர்களையும் கடற்றொழில் உற்பத்திகளின் வினைத்திறனையும் பயனையும் அதிகரிப்பதற்குத் தேவையான ஏனைய தொழினுட்ப உபகரணங்களையும் அரசாங்கத்தின் கடற்றொழில் மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வழங்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.