• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல் மாகாண மா நகரங்களில் விரிவான போக்குவரத்து முகாமைத்துவ திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- போக்குவரத்து துறையில் தற்போது நிலவும் சிக்கல் வாய்ந்த நிலைமைகளை குறைப்பதற்காக, முக்கியமாக மேல் மாகாணத்தினுள் நிலவும் வாகன நெரிசல்களைக் குறைக்கும் பொருட்டு துரிதமாக தீர்வுகளை வழங்குவது அத்தியாவசிய விடயமொன்றாக மாறியுள்ளது. இதில் குறுகியகால நடவடிக்கைகளும் அதேபோன்று நடுத்தவணைகால மற்றும் நீண்டகால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டிய புதிய தொழினுட்பத்தினை அறிமுகப்படுத்தல் போன்ற ஏனைய முக்கிய தலையீடுகளையும் செய்ய வேண்டியுள்ளது. இதற்கமைவாக, மேல்மாகாண மாநகர திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து திட்டத்தின் மூலம் நெகிழ்ச்சிகரமானதும் அந்தந்த நிறுவனங்களுக்காக குறித்தொதுக்கப்பட்ட அலுவலக நேரங்களை அறிமுகப்படுத்துதல், வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு புதிய இடங்களை அறிமுகப்படுத்துதல், வௌிச்ச சைகை முறைமைகளை இற்றைப்படுத்துதல், கூடிய இடவசதியுடன் சந்திகளை மேம்படுத்துதல், பாடசாலை மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்துதல், பொது பேரூந்து சேவையை மீளமைத்தல், பேரூந்துகளின் தரத்தினையும் சேவைகளையும் நவீன மயப்படுத்துதலும் மேம்படுத்துதலும், பல்மாதிரி போக்குவரத்து நிலையங்களை உருவாக்குதல், புகையிரத மின்னணு மற்றும் நவீன மயப்படுத்தல், உள்ளக நீர் வழிகளை போக்குவரத்துக்காகப் பயன்படுத்துதல், நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் பல செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மேல் மாகாண மாநகர திட்டத்திற்கான பாரிய போக்குவரத்து திட்டத்தின் கீழ் இனங் காணப்பட்டுள்ள மேற்போந்த உத்தேச செயற்பாடுகள், கருத்திட்டங்கள் மற்றும் சாத்திய தகவாய்வுகள் உரிய அமைச்சுக்களுடனும் ஏனைய நிறுவனங்களுடனும் இணைந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினாலும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினாலும் கூட்டாக .சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவையான தொடர்நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவையினால் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.