• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கப்பல்கள் மூலம் நிகழும் மாசடைதலைத் தடுப்பதற்கான சர்வதேச சமவாயத்தின் இணைப்பு இலக்கம் VI (MARPOL 73/78 Annex VI) கொண்ட சமவாயத்தில் இணைதல்
- கப்பல்கள் மூலம் நிகழும் புகை வௌியேற்றத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பு காணப்படுவதோடு, இந்த வாயு மாசடைதலைத் தடுக்கும் நோக்கில் கப்பல்கள் மூலம் நிகழும் மாசடைதலைத் தடுப்பதற்கான சர்வதேச சமவாயத்தின் (MARPOL 73/78) கீழ் கப்பல்கள் மூலம் நிகழும் வளி மாசடைதலைத் தடுப்பதற்கு 1997 சர்வதேச சமவாயமானது 2005 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச மட்டத்தில் அமுலில் உள்ளது. 05 இணைப்புகளை கொண்ட இந்த சமவாயத்தில் இலங்கை 1997 ஆம் ஆண்டில் ஒரு தரப்பானது. கப்பல்கள் மூலம் நிகழும் வளி மாசடைதலைத் தடுப்பதற்குரிய சர்வதேச ஒழுங்கு விதிகளை தாபிப்பதற்காக இந்த சமவாயத்திற்கு இணைப்பு இலக்கம் VI புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் கப்பல் மற்றும் துறைமுகம் சார்ந்த பணிகளில் தற்போதைய அபிவிருத்தி காரணமாக கப்பல்கள் மூலம் நிகழும் புகை வெளியேற்றத்தின் பாதகமான பாதிப்புகளுக்கு இலங்கை ஆட்பட்டுள்ளதோடு, இந்த வளி மாசடைதலைக் குறைத்து இதன் மூலம் சுகாதாரத்திற்கும் சூழலுக்குமான பாதிப்பினை குறைப்பது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, கப்பல்கள் மூலம் நிகழும் வளி மாசடைதலைத் தடுப்பதற்காக 1997 சமவாயத்திற்கு புதிதாகச் சேர்க்கப்பட்ட இணைப்பு இலக்கம் VI (MARPOL 73/78 Annex VI) ஐ ஏற்பதற்கும் இந்த ஒழுங்கு விதிகளை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவையான சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.