• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எரிபொருள் முனைவிடம் வரை எண்ணெய் குழாய்களைப் பதிக்கும் கருத்திட்டம்
- கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எரிபொருள் முனைவிடம் வரை எண்ணெய் குழாய்களைப் பதிக்கும் கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைபடுத்தும் தேவையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த கருத்திட்டத்தை மிக சிறந்த கொள்வனவு வழிமுறையாக "அரசாங்கம் ஒன்றினால் மற்றுமொரு அரசாங்கத்திற்கு" என்னும் வழிமுறையை பின்பற்றி இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.