• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மூடிய இரட்டை குழாய் ப்ளரஷன் மின்விளக்குகளினதும, புதிய மின்சார செயல்திறன் நியமங்கள் மற்றும் வலுசக்தி சிட்டைமுறையை அறிமுகப்படுத்துதல்
- கைத்தொழில் மற்றும் வாணிப துறைகளின் வளர்ச்சியாலும் கிராமிய பிரதேசங்களுக்கு மின்சார வலையமைப்பை விரிவுபடுத்தி நாட்டில் 100 சதவீத மின்சார விநியோகத்தை வழங்கியுள்ளமையாலும் இந்நாட்டின் மின்வலுத்துறையானது துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. தற்போது நாட்டில் மொத்த மின்சார நுகர்வோரில் முறையே 37 சதவீதமும் 27 சதவீதமும் வீடு மற்றும் வர்த்தக துறைகளினால் பயன்படுத்தப்படுகின்றது. இந்த இரண்டு துறைகளினதும் மின்சார பாவனை கணிசமான அளவு (சுமார் 30 சதவீதம்) மூடிய இரட்டை குழாய் ப்ளரஷன் மின்விளக்குகளுக்காகவும் சுமை தாங்கிகளுள்ள ப்ளரஷன் மின் விளக்குகளுக்காகவும் செலவாகின்றது. வலு சக்தி வினைத்திறனின் தரத்தினை அறிமுகப்படுத்தி உயர் வலுசக்தி செயற்திறன் கொண்ட மூடிய இரட்டை குழாய் ப்ளரஷன் மின்விளக்குகளையும் சுமை தாங்கிகளுள்ள ப்ளரஷன் மின் விளக்குகளையும் இறக்குமதி செய்வதனையும் நாட்டில் உற்பத்தி செய்வதனையும் ஊக்குவிப்பதன் மூலம் வருடாந்தம் 85 மணித்தியால கிகாவொட் மின்சாரத்தை நாட்டிற்கு சேமித்துக் கொள்ளலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக வலுசக்தி செயற்திறன் தரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக வெளிப்படுத்துவதனை கட்டாயப்படுத்தி மூடிய இரட்டை குழாய் ப்ளரஷன் மின்விளக்குகளினதும் சுமை தாங்கிகளுள்ள ப்ளரஷன் மின் விளக்குகளினதும் தரத்தினை ஒழுங்குறுத்தும் பொருட்டு 2007 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் அமைச்சருக்குள்ள தத்துவத்திற்கமைவாக வலுசக்தி சிட்டை கட்டளைகளை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் இந்த கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.