• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேயிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்துதல்
- சிங்கள மொழியில் தற்போது பயன்படுத்தப்படும் "கசல தே" என்னும் பெயருக்குப் பதிலாக அதற்கு மிகப் பொருத்தமான "நிராகரிக்கப்பட்ட தேயிலை" என்னும் சொற்களை பயன்படுத்தியும், இத்தகைய நிராகரிக்கப்பட்ட தேயிலை சம்பந்தமாக கட்டளைகளை ஆக்குவதற்கு அமைச்சருக்குள்ள தத்துவங்களை பலப்படுத்தியும் சட்டத்தின் கீழ் விதித்துரைக்கப்பட்டுள்ள தண்டனையொன்றுக்கு குற்றவாளியான ஆள் ஒருவருக்கு எதிராக அறவிடக்கூடிய ஆகக்கூடிய தண்டத் தொகையை 50,000/- ரூபாவிலிருந்து 5 இலட்சம் ரூபா வரையும் தவறொன்றை தீர்த்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் அறவிடக்ககூடிய உச்சத்தொகையை 10,000/- ரூபாவிலிருந்து 5 இலட்சம் ரூபா வரையும் அதிகரிப்பதற்குமாக 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை திருத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.