• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வவுனியா தொழினுட்பக் கல்லூரிக்காக கட்டடத்தொகுதியொன்றை நிருமாணித்தல்
- திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் தொழினுட்பக் கல்லூரி மற்றும் பயிற்சி திணைக்களத்திற்குச் சொந்தமான வவுனியா மாவட்டத்தில் தாபிக்கப்பட்டுள்ள தொழினுட்ப கல்லூரிகள் மூலம் இளைஞர்களுக்காக பத்தொன்பது (19) தொழிற்பயிற்சி பாடநெறிகள் நடைமுறைப்படுத்தப் படுவதோடு, அங்கு பாடநெறிகளை கற்பதற்காக வருடாந்தம் 500 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இந்த தொழினுட்பக் கல்லூரிகளில் நிலவும் இடவசதிகள் உட்பட ஏனைய வசதிகள் போதுமான மட்டத்தில் இல்லாததோடு, இந்த கல்லூரிகளுக்கு விரிவுரை மண்டபங்கள், செய்முறை செயற்பாடுகளுக்கான கட்டடங்கள், உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் கணனி ஆய்வுகூடங்கள், நூலகங்கள் உட்பட நீர்தொட்டிகள் அடங்கலாக ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட கட்டடங்கள் தொகுதியொன்றை 114 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட செலவில் நிருமாணிப்பதற்கும் 4 மல்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட செலவில் பதவியணி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குமாக திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.